எண்: 200
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: பயனில சொல்லாமை (Against Vain Speaking)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
சாலமன் பாப்பையா: சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
மு.கருணாநிதி: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்