எண்: 20
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: வான்சிறப்பு (The Blessing of Rain)
இயல்: பாயிரவியல் (Prologue)
மு.வரதராசனார்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
சாலமன் பாப்பையா: எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது
மு.கருணாநிதி: உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்