எண்: 196
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: பயனில சொல்லாமை (Against Vain Speaking)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா: பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
மு.கருணாநிதி: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்