எண்: 195
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: பயனில சொல்லாமை (Against Vain Speaking)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா: இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
மு.கருணாநிதி: நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்