எண்: 187
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: புறங்கூறாமை (Not Backbiting)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
சாலமன் பாப்பையா: கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
மு.கருணாநிதி: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்