எண்: 170
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அழுக்காறாமை (Not Envying)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
சாலமன் பாப்பையா: பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை
மு.கருணாநிதி: பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை