எண்: 168
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அழுக்காறாமை (Not Envying)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
சாலமன் பாப்பையா: பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்
மு.கருணாநிதி: பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்