
எண்: 165
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அழுக்காறாமை (Not Envying)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா: பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்
மு.கருணாநிதி: பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்