எண்: 139
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: ஒழுக்கம் உடைமை (The Possession of Decorum)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
சாலமன் பாப்பையா: மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
மு.கருணாநிதி: தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்