எண்: 1290
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: புணர்ச்சி விதும்பல் (Desire for Reunion)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
சாலமன் பாப்பையா: தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்
மு.கருணாநிதி: விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்