பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

எண்: 1283
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: புணர்ச்சி விதும்பல் (Desire for Reunion)
இயல்: கற்பியல் (The Post-marital love)

மு.வரதராசனார்: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

மு.கருணாநிதி: என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை