எண்: 1258
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: நிறையழிதல் (Reserve Overcome)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?
சாலமன் பாப்பையா: என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!
மு.கருணாநிதி: நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?