எண்: 122
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அடக்கம் உடைமை (The Possession of Self-restraint)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா: அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
மு.கருணாநிதி: மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை