ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

எண்: 1196
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: தனிப்படர் மிகுதி (The Solitary Anguish)
இயல்: கற்பியல் (The Post-marital love)

மு.வரதராசனார்: காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா: ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

மு.கருணாநிதி: காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்