
எண்: 1195
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: தனிப்படர் மிகுதி (The Solitary Anguish)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
சாலமன் பாப்பையா: நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?
மு.கருணாநிதி: நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?