எண்: 1189
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: பசப்புறு பருவரல் (The Pallid Hue)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
சாலமன் பாப்பையா: இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!
மு.கருணாநிதி: பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!