எண்: 1182
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: பசப்புறு பருவரல் (The Pallid Hue)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.
சாலமன் பாப்பையா: இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
மு.கருணாநிதி: பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!