
எண்: 1166
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: படர்மெலிந் திரங்கல் (Complainings)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
சாலமன் பாப்பையா: காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.
மு.கருணாநிதி: காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது