எண்: 1134
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல் (The Abandonment of Reserve)
இயல்: களவியல் (The Pre-marital love)
மு.வரதராசனார்: நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
சாலமன் பாப்பையா: ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
மு.கருணாநிதி: காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது