எண்: 1127
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல் (Declaration of Love"s special Excellence)
இயல்: களவியல் (The Pre-marital love)
மு.வரதராசனார்: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
சாலமன் பாப்பையா: என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.
மு.கருணாநிதி: காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்