எண்: 1123
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல் (Declaration of Love"s special Excellence)
இயல்: களவியல் (The Pre-marital love)
மு.வரதராசனார்: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
சாலமன் பாப்பையா: என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.
மு.கருணாநிதி: நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!