எண்: 1122
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல் (Declaration of Love"s special Excellence)
இயல்: களவியல் (The Pre-marital love)
மு.வரதராசனார்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
சாலமன் பாப்பையா: என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.
மு.கருணாநிதி: உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு