
எண்: 1117
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல் (The Praise of her Beauty)
இயல்: களவியல் (The Pre-marital love)
மு.வரதராசனார்: குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.
சாலமன் பாப்பையா: நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?
மு.கருணாநிதி: தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!