வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

எண்: 1108
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் (Rejoicing in the Embrace)
இயல்: களவியல் (The Pre-marital love)

மு.வரதராசனார்: காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா: இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

மு.கருணாநிதி: காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்