எண்: 1104
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் (Rejoicing in the Embrace)
இயல்: களவியல் (The Pre-marital love)
மு.வரதராசனார்: நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.
சாலமன் பாப்பையா: தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?
மு.கருணாநிதி: நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்