வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

எண்: 11
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: வான்சிறப்பு (The Blessing of Rain)
இயல்: பாயிரவியல் (Prologue)

மு.வரதராசனார்: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

சாலமன் பாப்பையா: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

மு.கருணாநிதி: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது