இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

எண்: 1048
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: நல்குரவு (Poverty)
இயல்: குடியியல் (Miscellaneous)

மு.வரதராசனார்: நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

சாலமன் பாப்பையா: நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

மு.கருணாநிதி: கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்