எண்: 1045
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: நல்குரவு (Poverty)
இயல்: குடியியல் (Miscellaneous)
மு.வரதராசனார்: வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
சாலமன் பாப்பையா: இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.
மு.கருணாநிதி: வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்